தமிழ்நாடு

50 பேரோடு வீட்டுக்குள் புகுந்து டீச்சரை அலறவிட்ட ஸ்கூல் HM - எஸ்.பி ஆபீஸில் பரபரப்பு புகார்

தந்தி டிவி

ஈரோடு அருகே வீட்டிற்குள் நுழைந்து குடும்பத்தினரை தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 16ம்தேதி தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளருமான முத்துராமசாமி, 50-க்கும் மேற்பட்ட ஆட்களுடன் வந்து ஆசிரியை பிரபாவதி வீட்டிற்கு சென்று அவரது மகள் மற்றும் தாயாரை தாக்கியதாக வீடியோ காட்சிகளுடன் பிரபா புகார் அளித்தார். ஆனால் முத்து ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்தும் அவரை கைது செய்யாமல் காவல்துறையினர் காலம்தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த ஆசிரியை பிரபா, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது குடும்பத்தை தாக்கி பொருள்களை எடுத்து சென்ற தலைமை ஆசிரியர் முத்துராமியை கைது செய்து உரிய நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

DMK | Congress | உடன்பாடு எட்டாததால் ஒருமுடிவை எடுத்த திமுக, காங்கிரஸ் தரப்பு - புதுவையில் திருப்பம்

ADMK | NDA Alliance | டெல்லியில் இருந்து ராயப்பேட்டை அலுவலகத்திற்கே வருகை

DMK | Congress | உடன்பாடு எட்டாததால் ஒருமுடிவை எடுத்த திமுக, காங்கிரஸ் தரப்பு - புதுவையில் திருப்பம்

NR Congress | Puducherry Election | வேட்பாளர் பட்டியல் - வெளியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்

Petrol Crisis | LPG Shortage | உலகையே ஒருவழியாக்கிய எரிபொருள் விவகாரம் - இந்தியாவில் விலை ஏற்றமா?