ஈரோடு ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போன் செய்து, வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்து இணைப்பினை துண்டித்துள்ளார். இதையடுத்து ஏ.டி.எஸ்பி. பொன் கார்த்திக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, மோப்பநாய் கயல் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பிளாட்பாரங்கள், உணவகங்கள், பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.