Erode Protest சீரியஸாகும் விவகாரம் - ஈரோட்டில் வகுப்பை புறக்கணித்து போராடும் மாணவர்கள் #students #school #erode ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பூனாச்சியில் செயல்படும் தனியார் எத்தனால் ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நத்தமேடு பள்ளியைச் சேர்ந்த 141 மாணவர்கள் 4-வது நாளாகவும், செம்படாபாளையம் பள்ளியைச் சேர்ந்த 88 மாணவர்கள் இன்று முதல் நாளாகவும் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ரசாயனக் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆலையை மூடும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.