ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான சத்திரம் சாலையில் பழைய வணிக வளாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நோட்டீஸ் வழங்கியும் அங்கு கடையை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் காலி செய்யாததால் நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்வதற்காக சென்றனர். அப்போது ஏலதாரர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரச்சனை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சூழலில் வாக்குவாதத்தின் போது கைகலப்பான பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.