தமிழ்நாடு

டேங்கர் லாரிக்குள் ரகசிய அறை...அதிர்ச்சியில் உறைந்த ஓனர்

தந்தி டிவி

ஈரோடு அருகே, பெட்ரோல் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து, நூதன முறையில் 250 லிட்டர் பெட்ரோலை திருடிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கவுண்டச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கீர்த்திராஜா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு, பெட்ரோல் சப்ளை செய்ய கோவையில் இருந்து டேங்கர் லாரி ஒன்று வந்தது. அப்போது, அந்த டேங்கர் லாரியில் சுமார் 250 லிட்டர் அளவிலான பெட்ரோல் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்திராஜா, இதுகுறித்து விசாரித்த போது, லாரியில் உள்ள டேங்கின் உட்புறத்தில் சிறிய அளவிலான ரகசிய டேங்க் பொறுத்தி பெட்ரோலை திருடியிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநரான தேனியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்