தமிழ்நாடு

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய கிணற்றில் இருந்து 2 சடலங்கள் மீட்பு

கவுந்தப்பாடியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிணற்றில் இருந்து உடலை மீட்ட போலீசார், அக்கம்பக்கதினரிடம் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தது அந்தியூர் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பது தெரியவந்தது. பூங்கொடியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தனது 10 வயது மகளுடன் அப்பகுதியில் பூங்கொடி தனியே வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தேடியதில் அந்த கிணற்றில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தாய், மகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை