ஈரோட்டில் போலி ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் தொழிலதிபர் ஒருவர் 2.50கோடி ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் நபரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் போலி டிரேடிங் செயலி மூலம் ரூ.2.5 கோடி வரை முதலீடு செய்ய வைத்துள்ளார். பின்னர் பணத்தை எடுக்க முயற்சி செய்த போது மோசடியில் சிக்கியது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொழிலதிபர் ஈரோடு சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், தொகை அதிகம் என்பதால் சென்னை சைபர் க்ரைம் பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.