ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 159 நபர்கள் அவர்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 32,435 குடும்பங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 117 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.