ஈரோடு விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார். சாலை போடும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்க முன்னதாகவே வந்து காத்திருந்த அவர், அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரின் குறையை கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடனே வேறு சிலரும் வரிசையாக வந்து குறைகளை தெரிவித்தனர்.