ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வணிக வளாகத்தில், தனியார் நிறுவனமொன்று, பூனைகள் கண்காட்சியை நடத்தி அசத்தியுள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட பூனை ஆர்வலர்கள், தங்களின் வளர்ப்பு பூனைகளை காட்சிப்படுத்தினர். முடி, நிறம், உடல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில்,தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.