தமிழ்நாடு

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த முகமது யாஷினுக்கு ரஜினி தங்கச் சங்கிலி பரிசு

சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவனை வரவழைத்து, தங்கக் சங்கிலி பரிசளித்து நடிகர் ரஜினி வாழ்த்தினார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர் குளம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா- அப்ருத் பேகம் தம்பதியின் 2வது மகன் முகமது யாஷின். சின்னசேமூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி அருகே சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்த முகமது யாஷின், ஆசிரியையிடம் ஒப்படைத்தான். மாணவனின் நேர்மையை பாராட்டிய ஆசிரியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், முகமது யாஷின், நடிகர் ரஜினியை சந்தித்து ஆசி பெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தான்.

இதையறிந்த ரஜினி, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு மாணவனை வரவழைத்து, வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாணவனுக்கு தங்கச்சங்கிலியும் பரிசாக அணிவித்து, ரஜினி பாராட்டினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை