ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வலை தளங்களில் பரப்பி தன்னுடைய வண்டியை கண்டு பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என முருகன் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.