பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில், 62 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு சுற்றுகளில் 71 ஆயிரம் இடங்கள் நிரம்பிய நிலையில், 62 ஆயிரம் மாணவர்களும் அறிவிக்கப்பட்ட இடங்களை உறுதி செய்தால், ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். இதன்மூலம் 55 ஆயிரம் இடங்கள் இந்தாண்டு காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 14 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராததாகவும், 42 கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.