தமிழ்நாடு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை : ஆசிரியர்கள் மீது மாணவியின் தாய் புகார் - முதல்வரிடம் நேரில் மனு

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர், கோயம்புத்தூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பூசாரிப்பாளையத்தை சேர்ந்த யுரேகா, தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துச்சண்டையில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்தவரை, விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அடையும் அளவுக்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் மாணவி யுரேகா என்பதால், ஆசிரியர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துக்கொண்டதாகவும், இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தாய், முதலமைச்சரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்