தமிழ்நாடு

பொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்-லைன் வழியில் இன்று காலை 10 மணிக்கு துவங்கின. ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 40 கேள்வி கேட்கப்படுகின்றன. இதில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4 சுற்றுகளாக தேர்வு நடைபெறுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான இந்த இறுதி செமஸ்டர் தேர்வு, இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்