தமிழ்நாடு

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கான நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்குரிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் தங்களின் கட்டு்ப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு, ஆண்டுதோறும் அளிக்கப்படும் அங்கீகார அனுமதியை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பெற வேண்டும் என்றும், மாணவர்களுக்கான முதல் கட்டக் காலந்தாய்வினை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப படிப்புகளில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, அக்டோபர் 1 ஆம் தேதி தேதி முதல் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிற்படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வினை, அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 25ம் தேதி, முதலாம் ஆண்டு வகுப்புகளைத் துவங்க வேண்டும் என்று கூறப்பட்டதுடன், மாணவர் சேர்க்கை குறித்த அனைத்துப் பணிகளும் அக்டோபர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவுறுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி