தமிழ்நாடு

காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டில் வந்த கம்ப்யூட்டர் பொறியாளர் கைது

காதலியை வழியனுப்ப போலி டிக்கெட்டில் சென்னை விமான நிலையம் வந்த கம்ப்யூட்டர் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வர முயன்றுள்ளார். இதை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை அதிகாரிகள் தடுத்து, விசாரித்தபோது, சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த வருண் என்பதும், தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராக இருப்பதும் தெரிந்தது.

மேலும் பயணத்தை ரத்து செய்துவிட்டு செல்வதாக கூறிய அவரது பயணச்சீட்டை பார்த்தபோது, அதில் ஒரு பெண்ணின் பெயரும், இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. விசாரணையில், இவரது காதலி, திருவனந்தபுரம் செல்ல விமான நிலையம் வந்த நிலையில், அவரை வழியனுப்ப அவரது பயணச்சீட்டில் இவரது பெயரையும் போலியாக சேர்த்ததும் தெரியவந்தது.

காதலி விமானத்தில் ஏறிச் சென்றபின் அந்த பயணச்சீட்டைக் காட்டி வெளியே வர முயன்றபோது, அதிகாரிகளிடம் சிக்கினார் வருண். இதையடுத்து, விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்