தமிழ்நாடு

என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் - குற்ற பின்னணி என்ன?

தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். யார் இந்த நீராவி முருகன்? விரிவாக பார்ப்போம்...

தந்தி டிவி

சினிமாக்களில் காட்சிப்படுத்தப்படும் பல ரவுடிகளை அப்படியே நிஜ வாழ்க்கையில் பிரதிபலித்த முகம் தான் இந்த நபர்.. நீராவி முருகன்

நீராவி என்பது அவரது ஊர்... தூத்துக்குடி மாவட்டம் நீராவி மேடு...

இளம் வயதிலேயே வழிமாறி போன இந்த நீராவி முருகன், தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபல ரவுடி ஒயின் ஷங்கருடன் சேர்ந்து அவருடையை சிஷ்யன் என நெஞ்சில் பச்சைக்குத்தி ஊரில் அடாவடித்தனம் செய்து வந்துள்ளார்.

ரவுடியிசம் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தவர், 1998ம் ஆண்டு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வைத்து செல்வராஜ் என்பவரை கொலை செய்ததாக முதல் வழக்கு... பின்னர் தமிழகத்தை உலுக்கிய ஆலடி அருணா கொலை வழக்கில் உடந்தை இப்படி, அவர் செய்த அட்டூழியம் பல.

தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றாலும், பெரும்பாலும், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, சென்னையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் நீராவி முருகன். அதிலும், போலீசுக்கு ஆதாரம் கிடைக்காதபடி பல தவறை செய்து, பல வழக்குகளில் இருந்து தப்பித்துள்ளார்.

ஆனால், 2014ம் ஆண்டு சென்னை துரைப்பாக்கத்தில் தனியாக நடந்து சென்ற பெண் ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட போது அதை மாடி வீட்டில் இருந்து ஒரு மாணவி வீடியோ எடுத்துவிட்டார். இதுதான் நீராவி முருகனின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நீராவி முருகனின் அடையாளம் தெரிந்தது. போலீசாரிடம் அவர் பிடிபட்டார். எப்படி குற்றத்தை செய்தாய் அவரை நடித்துக் காட்டச் சொன்ன போது, அந்த ஆசிரியை காலில் விழுந்து கதறிய நிகழ்வுகளும் உண்டு.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் நடந்து செல்லும் பெண்கள்தான் நீராவி முருகனின் இலக்கு. அவர்களிடம் பணம் நகை பறிக்கும் நீராவி முருகன், அவ்வப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

திருட்டுப் பணத்தை உல்லாசமாக செலவளிக்க நீராவி முருகனுக்கு பல இடங்களில் ஆசைநாயகிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக தலையில் விக் வைத்தும், ஜீன்ஸ் சட்டை, ஸ்போர்ட்ஸ் ஷூ என டிப்டாப்பாகவே சுற்றியுள்ளார் நீராவி முருகன்.

பலமுறை போலீசில் சிக்கி பின்னர் வெளியே வந்த இவரை, ரேணிகுண்டாவிலும் திருவண்ணாமலையிலும் போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோடியதாகவும் கிரைம் லிஸ்ட் உண்டு.

இப்படி தொடர் அடாவடித்தனம் செய்து வந்த நீராவி முருகன், திண்டுக்கலில் 240 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட போது நாங்குநேரி அருகே சிக்கியிருக்கிறார். இந்த முறையும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் தற்காப்புக்காக நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு