தமிழ்நாடு

இமானுவேல் சேகரனார் நினைவு தினம் - இதெற்கெல்லாம் அதிரடி தடை.. கலெக்டர் எச்சரிக்கை

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்த வருபவர்கள் 23 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் வரும் 11-ஆம் தேதி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனத்தில் மட்டுமே வர வேண்டும் என்றும்

பிற மாவட்டங்களில் இருந்து வருவோர் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும் என்றும் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர், வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது என எச்சரித்துள்ளார்.

வாகனத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதித்த மாவட்ட ஆட்சியர், பட்டாசு வெடிப்பதையோ, ஒலிபெருக்கி பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

குறிப்பாக வாகனங்களில் ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டவோ, முழக்கமிடவோ கூடாது என்றும், பேருந்துகளில் பயணம் செய்யும் நபர்கள் படிக்கட்டிலும் மேற்கூரையிலும் பயணிக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அத்துடன் அரசியல் தலைவர்கள் வரும்போது அவருடன் மூன்று சொந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்