கடலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து, 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில், கீழநத்தம் கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் கன மழை பெய்த நிலையில், மின்கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற 5 மாடுகள், அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
மேலும் ஒரு மாடு, காயத்துடன் உயிர் தப்பியது. உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்கள், நஷ்ட ஈடு வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.