ஊரடங்கு காலத்தில் முந்தைய மாதம் செலுத்திய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
* நான்கு மாதங்களுக்கு சேர்த்து முந்தைய மாத கட்டண அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு
* இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
* இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என கூறினார்.
* பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
* ஊரடங்க காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
* இதயடுத்து தமிழக அரசின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள். விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.