தமிழ்நாடு

விதி மீறி வைக்கப்பட்ட மின்வேலி....குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

சதானந்தபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் சீனிவாசன், முனியசாமி ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, கீழே கிடந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்ததில், முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விதிகளை மீறி மோகன்ராஜ் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்தது தெரியவந்தது.

இதனிடையே, தலைமறைவான மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்