தமிழ்நாடு

பணம், நகை பறிமுதல் தேசிய அளவில் தமிழகம் நம்பர் 1 - தடுத்து நிறுத்த வழியே இல்லையா..?

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தற்போது தேர்தல் பிரசாரத்தின் போதே, தமிழகத்தில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தந்தி டிவி

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தற்போது தேர்தல் பிரசாரத்தின் போதே, தமிழகத்தில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது போன்று வாக்காளர்களுக்கு, பணம், நகை மற்றும் பொருள் வழங்கலை தடுக்க என்ன வழி என்பது குறித்து தற்போது காணலாம்.

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனைகளில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து துறையிலும் நம்பர் 1 இடத்தில் தமிழகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டதிலும் நம்பர் 1 இடத்தில் தமிழகம் இருக்கிறது.

பண முட்டைகளையும், தங்க நகைகளையும் சிறிய சிறிய கட்சிகள் எடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படி என்றால் இந்த விதிமீறல்களில் எந்தெந்த கட்சிகளுக்கு தொடர்பு இருக்கிறது?

தேர்தலின் போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பல்வேறு கட்சிகள் மீது விதி மீறல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா, நடத்தப்படுகிறதா, வழக்குகளில் யாருக்காவது சிறை தண்டனை கிடைத்து இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லை.

விதிமீறல்களில் ஈடுபடும் கட்சிகள் மீது, நடவடிக்கை எடுப்பதற்கு தற்போது உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடமில்லை. இதனால் திமீறலில் ஈடுபட்டால், கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், கட்சிகளுடைய சின்னத்தை முடக்குவதற்கான வகையிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறுகின்றனர், சமூக ஆர்வலர்கள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்