தமிழ்நாடு

திருச்சியில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி.. பறக்கும் படை காட்டிய அதிரடி

தந்தி டிவி

திருச்சி தில்லைநகர் பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரிலையன்ஸ், டி மார்ட் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனத்தில் கட்டுகட்டாக ரூபாய் 45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதால் அதிகாரிகள் பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உரிய ஆவணங்களின்றி மரம் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட 10 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, சிவகங்கையில் உரிய ஆவனமின்றி கோவில் சிற்பி கொண்டு சென்ற ரூபாய் 83 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்