சந்தோலியிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று காசிபூரில், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்த்த எம்.ஜி.பி. கட்சி வேட்பாளர் அந்த வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.