சென்னை மடிப்பாக்கம் 188வது வட்டத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீனா செல்வம் மறைந்த தனது கணவர் நினைவிடத்தில் வெற்றிக்கான சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்தினார்.சென்னை மாநகராட்சிகுட்பட்ட 188வது திமுக வட்ட செயலாளர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில்,இந்த வார்டில் அவரது மனைவி சமீனா செல்வம் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மேலும்,அவர் திமுக நிர்வாகிகளுடன் சென்று தனது கணவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.