தமிழ்நாடு

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சிதேர்தல்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க 4 வாரம் அவகாசம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரிய வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், 15 நாட்களுக்கு உள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தற்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், மனுவுக்கு பதிலளிக்க 6 வார கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அரசு தரப்பும் கால அவகாசம் கோரிய நிலையில், மாநகராட்சி , நகராட்சிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்