கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில், அரசு பேருந்து மோதிய விபத்தில் ஸ்டுடியோ உரிமையாளரான முதியவர் படுகாயமடைந்தார்
குழித்துறை சந்திப்பில் ஸ்டுடியோ நடத்தி வரும் பாகுலேயன், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, குறுகிய சாலையில் வேகமாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த அவருக்கு நெஞ்சு, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.