கும்பகோணத்தில் தெரு நாய்கள் கடித்து முதியவர் உயிரிழப்பு
நாய்கள் ஒன்று சேர்ந்து கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கும்பகோணம் பாலக்கரை அருகே பத்திற்கு மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்ததால் முதியவர் உயிரிழப்பு
கும்பகோணம்பாலக்கரை அருகே
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சின்னதுரை (75/26). இவர் பாலக்கரை பகுதியில் உள்ளநேஷனல் வித்யாலயா பள்ளி அருகே காயங்களுடன் கிடந்துள்ளார். அவரை 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து குதறியுள்ளன.
இதை பார்த்த பாலக்கரையில் இருந்து ஆட்டோவில் வந்த கோபு என்பவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கால், கை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் இருந்த சின்னதுரை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகாகாவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெரு நாய்கள்கடித்ததால் முதியவர் இறந்த சம்பவம் பாலக்கரை பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது