தமிழ்நாடு

மேட்டூரில் போதையில் முதியவர் அடித்துக்கொலை - இருவர் சிறையில் அடைப்பு

மேட்டூரில் போதையில் முதியவர் அடித்துக்கொலை - இருவர் சிறையில் அடைப்பு

thanthitv

மேட்டூரில் போதையில் முதியவரை அடித்து கொலை செய்த ரவுடிகளின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் ராஜேந்திரன். இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த ரவுடிகளான இளைஞர்கள் பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகியோர் கஞ்சாவை புகைத்து முதியவரின் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது. இதனை முதியவர் கேட்டபோது ரவுடி பிரகாஷ் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், ரவுடிகள் இருவரையும் போலீசார் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை