தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்...

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தந்தி டிவி

மதுரை

பக்ரீத் சிறப்பு தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மதுரை மகபூப்பாளையம் திடலில் நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கோவை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதே போல் போத்தனூர், குனியமுத்தூர் , ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கோட்டாறு, தக்கலை, தேங்காப்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட படுதிகளில் சுன்னத்துல் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் காரைக்காலில் உள்ள பெரியபள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை