தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு எதிரொலி : முட்டை விலை ரூ.4-க்கு விற்பனை

முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் தினமும் மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஜா புயல் தாக்கிய புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் சத்துணவு முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கார்த்திகை தீபம், ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்வது உள்ளிட்டவை காரணமாக முட்டை நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை 20 காசுகள் குறைந்து, 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்