தமிழ்நாடு

முட்டை கொள்முதல் ஒப்பந்தத்தை நிறுத்துக - பண்ணை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சத்துணவு திட்டத்தின் கீழ், ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி கோரியது. இதனை எதிர்த்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 20ஆம் தேதி வரை டெண்டர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்