தமிழ்நாடு

முட்டை கொள்முதல் விலை ரூ.4.10 ஆக உயர்த்தி நிர்ணயம்

கோழி முட்டை ஒன்றின் விலை, 4 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோழி முட்டை ஒன்றின் விலை, 4 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்நிலையில், நடைபெற்ற தேசிய முட்டை உற்பத்தியாளர்கள் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 8ஆம் தேதி வரை 3 ரூபாய் 35 காசுகளாக இருந்த முட்டை விலை, 6 நாட்களில் 75 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால், விலை உயர்வு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்