புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் அலுவலகத்திற்குள் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார். கே புதுப்பட்டி அருகே சென்னையை சேர்ந்த காத்தான் பாலு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி. வெகுமதியும் வழங்கினார்.