இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரேனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில், நாட்டிற்கு வழிகாட்டும் வகையில், தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். பள்ளி வேலை
நாட்களை போல், வகுப்பு மற்றும் பாட வாரியாக ஒளிபரப்பு அட்டவணை தயாரித்து, 2 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும் என்றும் அரசின் இந்த முயற்சிகளுக்கு 11 தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகள் உறுதுணையாக இருப்பதாகவும் செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளார். நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்ததற்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.