காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரத்தோப்புகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் எனவும் ஆதி திராவிடர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.