தமிழ்நாடு

ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

ஆங்கில வழி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்பில் 15-க்கும் குறைவான மாணவர்களே இருந்தால், அவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதில், மாணவர்கள் ஆசிரியர் விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர்கள் எவ்வளவு பேர் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

* 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர், 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 50 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடத்திற்கு 1 ஆசிரியர் வீதம் 5 ஆசிரியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஆசிரியரும், வாரத்திற்கு 28 வகுப்புகள் எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்