தமிழ்நாடு

முதல்வரின் உதவி நாடிய மத்திய பாதுகாப்புப்படை வீரர் - தேவையான உதவி செய்யப்பட்டதாக முதல்வர் பதில்

ஊரடங்கு காலத்தில் தனியாக தவித்த மத்திய பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில் தனியாக தவித்த மத்திய பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊரான கடையநல்லூரில் 89 வயதான அவரது தாயாருக்கு மருந்துகள் தேவைப்படுவது குறித்து ட்விட்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவரது தாயாருக்கு தேவையான மருந்துகள் அதிகாரிகள் மூலம் சென்றடைந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ரவிக்குமாரின் தாயாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் இன்றி நலமாக இருப்பதாகவும், தைரியத்துடன், நிம்மதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்