சிவகங்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்த போது, ஜல்லிக்கட்டு காளை ஒன்று கூட்டத்தில் புகுந்தது. அதனை மற்றவர்களுடன் சேர்ந்து, குரல் கொடுத்து விரட்டிய முதலமைச்சர், தமக்கு விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை பரிசளித்த தாகவும், அதனை அடுத்த ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வரப் போவதாகவும் கலகலப்பாக பேசினார்.