தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை சார்பாக 2 கோடி ரூபாய் செலவில் இணைய தளம் துவக்கம், மீன்வளத்துறை சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 10 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் மீன்பிடி படகு தளம் மற்றும் விற்பனை கூடம் இவையும் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் கெல்லீஸில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் 4 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பில் தங்கும் அறை, தொழிற் பயிற்சி கூடம், பணியாளர் அறை, சமையலறை உள்ளிட்ட வசதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.