தமிழ்நாடு

471 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை தலைமைச்செயலகத்தில், 127 கோடி ரூபாய் மதிப்பிலான 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேருந்தில் ஏறி, அதில் உள்ள செய்யப்பட்டுள்ள வசதியை பார்வையிட்டனர். 471 பேருந்துகளில் 60 பேருந்துகள் குளிர்சாதனம், படுக்கை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா, திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?