சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். நடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு பிறகு தான் தனது அரசியல் வாழ்வு தொடங்கும் என்றும் கூறினார்.