பிரதமர் மோடிக்கு, இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். கீழடி ஆய்வு, கடந்த ஆண்டு பிரதமர் மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டதை கடிதத்தில் நினைவுகூர்ந்த முதலமைச்சர், கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 16 பேர் கொண்ட குழுவை மாற்றி அமைக்க மத்திய கலாச்சார துறைக்கு அறிவுறுத்துமாறு Card-5 பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.