முன்னதாக, நெல்லை மாவட்டம், இட்டமொழியில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். இட்டமொழிக்கு வந்த அவருக்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.