அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி மருத்துவமனை கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். மத்திய அரசு 60 சதவீத பங்கு நிதி, மாநில அரசின் 40 சதவீத நிதியுடன், அரியலூர் தெற்கு கிராம பகுதியில் 10 புள்ளி எட்டு மூன்று ஹெக்டேர் நிலப்பரப்பில், இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இதுவரை 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், அரியலூர் 10-வது கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.