கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 15 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற14 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 20 கோடியே 86 லட்சம் மதிப்பில் 60 பணிகளுக்காக அடிக்கல் நாட்டியதோடு, 15 ஆயிரத்து 16 பேருக்கு 33 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.