டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒருமணிநேரம் நீடித்தது. அப்போது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.