2021ம் ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சோளிபாளையத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டம், ஆயிரத்து 652 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இத்திட்டத்தின் மூலம் விவசாய மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.