காஞ்சிபுரம் பட்டுச்சேலை கடைகளில் ED, IT சோதனை காஞ்சிபுரத்தில் பிரபல பட்டுச்சேலை விற்பனை கடைகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி தொடர்பான முறைகேடுகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை காரணமாக கடைகளில் பட்டுச்சேலை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சேலை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடை வாசல்களில் வாடிக்கையாளர்கள் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.